புதுடெல்லி, ஆக.23: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் 26-ம் தேதி வரையில் காவலில் வைத்து சிபிஐ விசாரிக்க என்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடர்பாக ப.சிதம்பரத்திற்கு நேற்று முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், அவரை சிபிஐ கைது செய்தது. நேற்றிரவு முதல் தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. பல கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்ததாவும் விசாரணைக்கு ஓத்துழைக்கவில்லை என்றும் சிபிஐ தரப்பு கூறியது. இதையடுத்து நேற்று மாலை டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு ப.சிதம்பரத்தை அழைத்துச் சென்றனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி சிறப்பு நீதிமன்றம் நீதிபதி, 5 நாட்கள் காவலில் வைத்து ப. சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தார். இதனைத் தொடர்ந்து வரும் 26ம் தேதி வரையில், ப.சிதம்பரம் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவார் என்று தெரிகிறது.