சென்னை, ஆக.23: நகரின் பல்வேறு இடங்களில் பூட்டியிருக்கும் வீட்டை குறிவைத்து கைவரிசை காட்டிவந்த நபரை, போலீசார் கைது செய்து, 11.5 சவரன் நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பெருங்குடி ரெயில் நிலையம் அருகே அடையாறு துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சுற்றித்திரிந்து கொண்டிருந்த சந்தேகத்திற்குரிய நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

புதுபெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 34) என்பது விசாரணையில் தெரியவந்தது. இவரிடம் இருந்து 11 சவரன் நகை, ரூ.2,000 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றை வேளச்சேரியில் இருந்து திருடிவந்ததாக பிரபாகரன் போலீசில் தெரிவிக்க, இது குறித்து வேளச்சேரி போலீசாரிடம் கேட்டபோது, நகரின் பல்வேறு இடங்களில் பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கைவரிசை காட்டிவந்த பிரபாகரன், வேளச்சேரியில் உள்ள முனீஸ்வரன் (வயது 67) என்பவரது வீட்டில் திருடிவிட்டு தலைமறைவாகிவிட்டதாகவும், அவரை தேடிவந்ததாகவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில்தான், பெருங்குடி ரெயில் நிலையத்தில் தனிப்படை போலீசில் பிரபாகரன் பிடிப்பட்டுள்ளார்.