சென்னை, ஆக.23: விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தை தீபாவளிக்கு முன்னதாகவே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில். இப்படத்தில் விஜய்யிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் ஒரு பாடல் பாடி உள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியாக உள்ளது. வரும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தை முன்கூட்டியே வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் 27-ம் தேதி ஞாயிற்றுகிழமை வருவதால் முன்கூட்டியே வியாழக்கிழமை (24-ம் தேதி) படத்தை வெளியிட்டால் 4 வசூல் ஈட்டிவிடலாம் என திட்டமிட்டுள்ளனர்.

விஜய் படம் முன்கூட்டியே வருவதார் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.