சென்னை, ஆக. 23: 2018ம் ஆண்டிற்கான சிறந்த சேவை புரிந்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் 20 பேருக்கு ரூ.50,000- க்கான காசோலை, பதக்கம் வழங்கியதுடன் 480 மருத்துவர்களுக்கு அமைச்சர் சி. விஜய பாஸ்கர் பாவவட்டு சான்றி தழ்களை வழங்கி கவுரவித்தார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக கூட்டரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பங்கேற்று 2018ம் ஆண்டு மருத்துவ துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் பாரதி, நீலா கண்ணன், ஆனந்தகுமார், அருணாகுமாரி, திருநாவுக்கரசு, சந்திரமௌலீஸ்வரி, தேவிமீனாள், ஸ்ரீகாந்த், தனபால், சிவஞானம், பாலசுப்பிரமணியன், விடுதலை விரும்பி, பசுபதி, கீதாராணி, முத்தமிழ் செல்வி, பிரபாகரன், மோகன் பிரசாத், செங் குட்டுவன், சென்னியப்பன் ஆகிய அரசு மற்றும் தனியார் துறைச் சார்ந்த 20மருத்துவர் களுக்கு ரூ.50,000-க்கான காசோலை, பதக்கத்துடன் கூடிய விருதுகள் மற்றும் 480 மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு எடுத்த பல்வேறு சீரிய முயற்சிகளின் காரணமாக தமிழ் நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார் களின் இறப்பு விகிதம் தேசிய இலக்கைவிட பாதியாக குறைத்து சாதனை புரிந் துள்ளது. உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக சிறந்த மாநிலத்திற்கான விருதை பெற்று தமிழகம் தனிச் சிறப்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 1301 கொடையாளர் களிடமிருந்து 7597 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை யிடமிருந்து ரூ.1,634 கோடி நிதி உதவி பெற்று தமிழ்நாடு நகர்ப்புற பகுதிகளில் வாழும் மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட சுகாதாரம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனித வள மேம்பாடு ஆகியவை மேம்படுத்தப்படும். மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் இதுவரை 12,815 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவக் காலிப் பணியிடங்கள் இல்லாத நிலை விரைவில் எய்தப்படும். இவ்விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் அர்ப்பணிப் புடன் பணியாற்றி வரும் மருத்துவர் களுக்கு ஒரு உற்சாக டானிக்காக அமையும். தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழ அனை வரும் சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறுஅவர் கூறினார். இவ்விழாவில் குடும்ப நலத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.