அண்ணாமலை பல்கலையில் ‘நாட்டிய சங்கமம் நிகழ்ச்சி

தமிழ்நாடு

சிதம்பரம், ஆக. 23: அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 90ம் ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, இசைத்துறையில் “நாட்டிய சங்கமம்’ என்ற நாட்டிய திருவிழா டெக் பார்க் அரங்கில் நடைபெற்றது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 90ம் ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்ற இசைத்துறையில் “நாட்டிய சங்கமம்’ என்ற நிகழ்ச்சியில் வினிதா ஸ்ரீநந்தனின் மோகினியாட்டமும். . ஜாய் கிருஷ்ணனின் கேரள நடனமும், சஹானா ராகவேந்திரா மையா ஒடிஸி நடனமும், அனுபமா மோகன் குச்சுபடி நடனமும்,லக்ஷ்மி நாராயண ஜனா கதக் நடனமும் பார்வை யாளர்களை பரவசப்படுத்தியது.

இந்த நிகழ்ச்சிக்கு பதிவாளர், கிருஷ்ண மோகன் தலைமை தாங்கினார். நுண்கலைப்புல முதன்மையர் முத்துராமன் வரவேற்புரை ஆற்றினார். இசைத்துறைத் தலைவர் குமார் நன்றியுரை ஆற்றினார். கேரள சாஸ்தீரிய நடனமான மோகினியாட்டம் மற்றும் கேரள நடனம், ஒடிஸா மாநிலத்தின் சாஸ்தீரிய நடனமான ஒடிஸி நடனம், ஆந்திர மாநிலத்தின் நடனமான குச்சுப்புடி நடனம், மற்றும் வட மாநிலங்களில் மிகப் பிரபலமாக ஆடப்படும் கதக் நடனம் ஆகிய ஐந்து வகையான நாட்டிய சங்கமத்தை ஏராளமானோர்
கண்டு களித்தனர்.