சென்னை, ஆக.24: வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்தவர் ஆதாம் (வயது 26).

இவர், நேற்றிரவு கழுத்து அறுப்பட்ட நிலையில் பாத்ரூமில் இருந்துள்ளார். வீட்டிலிருந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து, ஆதாமை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர். மனநலம் பாதிக்கப்பட்ட ஆதாமிற்கு சிகிச்சை முடிந்து கடந்த 2 நாட்கள் முன்னர்தான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.