புதுவை, ஆக.24: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் 10-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. இது குறித்து, அந்த கல்லூரி அதன் இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: விழாவுக்கு ஜிப்மர் தலைவர் டாக்டர் விஷ்வ மோகன் கடல்சார் தலைமை தாங்குகிறார்.

இந்திய அரசின் நிதி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் வினோத்குமார் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தவுள்ளார். இந்த விழாவில் 405 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது. சிறப்பு தகுதிகள் பெற்ற 90 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் காலை 8 மணிக்கு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.