சென்னை, ஆக.24: கே.கே. நகரில் போலீசார் நேற்றிரவு நடத்திய வாகன சோதனையில் ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 167 கிலோ குட்கா, பணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.

சென்னை, கே.கே.நகரில் போலீசார் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 167 கிலோ குட்கா, ரூ.17 ஆயிரம் ரொக்கம் இருந்ததையடுத்து, அவற்றை கைப்பற்றிய போலீசார், மஸ்தான் கனி (வயது 44), சதாம் உசேன் (வயது 27) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

வெளி மாநிலங்களில் இருந்து பேருந்து மூலம் கடத்திவரப்பட்ட குட்காவை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்று இவர்கள் வாங்கிவந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர்களின் செல்போன்கள் மற்றும் ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.