விளையாட்டு காயத்திற்கான சிகிச்சை மையம் துவக்கம்

சென்னை

சென்னை, ஆக.26: கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் விளையாட்டு காயங்களுக்கான சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. விளையாட்டு தொடர்புடைய நிகழ்வுகளில் காயமடைபவர்களுக்கு குறைந்த கால அளவிற்குள் உரிய மருத்துவ சிகிச்சையையும், பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கான புனர்வாழ்வையும் வழங்குவதற்கு ஒரு நவீன சிகிச்சை மையத்தை சென்னையில் குளோபல் ஹெல்த்சிட்டி மருத்துவமனை துவக்கி உள்ளது.

காயங்களுக்கான சிகிச்சையை வழங்குவதற்காகவும், எதிர்காலத்தில் காயங்கள் ஏற்படாமல் தடுக்கவும் மற்றும் உடல் திறனை மதிப்பீடு செய்யவும் மருத்துவர்கள், இயன் முறை மருத்துவ நிபுணர்கள், விளையாட்டு மருத்துவ வியல் மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகிய சிறப்பு நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு குழுவை இம்மையம் கொண்டிருக்கும்.

தேசிய கபடி அணி மற்றும் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் இந்த மையத்தை திறந்து வைத்தார். முழங்கால், தோள்பட்டை, முழங்கை காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மற்றும் அனைத்து சிக்கலான தசை நார் மறு கட்டமைப்பு சிகிச்சைகளை மேற்கொள்ளவும் இந்த மையம் நிபுணத்துவத்தை பெற்றுள்ளது.

இது குறித்து குளோபல் ஹெல்த்சிட்டி மருத்துவமனையின் எலும்பு முறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவத்துறையின் தலைவரும் மற்றும் முதுநிலை சிறப்பு நிபுணருமான டாக்டர் கிளெமெண்ட் ஜோசப் கூறுகையில், இந்தியாவில் மக்கள் புதிய உடற்தகுதி புரட்சியில் தன்னை இணைத்துக்கொள்ள தயாராகி வருகின்றனர். சென்னையில், சைக்கிளிங், ஓட்டம், நீச்சல் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுகள் போன்ற செயல் நடவடிக்கைகள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தங்களது விளையாட்டு செயல்பாட்டின் போது ஏற்படுகிற காயங்களுக்கு சிகிச்சை பெற அடிக்கடி எங்களது மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர் என்று கூறினார்,