ராமநாதபுரம்,ஆக. 26: ராமநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் அருகே உள்ள பட்டணம்காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி கார்த்திகாதேவி (வயது 30). வெளிநாட்டில் கோபால கிருஷ்ணன் இவர் வெளியூர் சென்றிருந்த போது அவரது வீட்டின பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தமர்ம ஆசாமகிள் பீரோவில் இருடுமுந்த 11 சவரன் நகையை கெள்ளையடித்து சென்றுள்ளனர்.

வெளியூர் சென்று திரும்பிய போது அவர் வீட்டின் உள்ளபொருட்கள் பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. இதுகுறித்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகார் தொடர்பாக கேணிக்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அந்தப்பகுதியில் கடந்த 24-ந் தேதி மேலும் 3 வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எனவே ஒரே கும்பல் தான் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொள்ளை நடந்த வீடுகளில் கைரேகைகள் சேகரிக்கப்பட்டு அதன் மூலம் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.