சென்னை, ஆக.27:  வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில், அவர் விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 24-ம் தேதி முதல் அக்டோபர் 16-ம் தேதி வரை ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்வுக் குழு தலைவர் செந்தில்நாதன் கூறுகையில், அனுபவத்தின் அடிப்படையிலும், சக வீரர்களை ஊக்குவிக்கும் திறன் அடிப்படையிலும் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமித்துள்ளோம் என்றார்.

2106-17-ல் நடந்த விஜய் ஹசாரே தொடரில், தினேஷ் கார்த்திக் 9 போட்டிகளில் விளையாடி 2 சதம், 4 அரைசதம் உட்பட 607 ரன்கள் விளாசியிருந்தது, குறிப்பிடத்தக்கது.