கான்பூர், ஆக.28: உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் இன்று எக்ஸ்பிரஸ் ரெயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின.

கான்பூர் மத்திய ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வந்தது. அப்போது அந்த ரெயில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மொத்தம் 4 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.

இதையடுத்து அந்த பெட்டிகளில் உள்ள பயணிகள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டனர். ரெயில் மெதுவாக சென்றபோது தடம் புரண்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

முன்னதாக நேற்று நள்ளிரவில் கான்பூர் அருகே ரூமா கிராமத்தில், ஹவுரா-புதுடெல்லி பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன. இதில் 15 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.