புதுடெல்லி, ஆக.28: சதாப்தி, தேஜஸ், கேட்டிமன் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில், டிக்கெட் கட்டணத்தில் 25% வரை குறைக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது.

டெல்லி-லக்னோ, ஆமதாபாத்-மும்பை ஆகிய வழித்தடங்களில் 2 தேஜஸ் ரெயில்களை அக்டோபர் முதல் ரெயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. இயக்க தொடங்கும்.

இதற்கிடையே, பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும் சதாப்தி, தேஜஸ், கேட்டிமன் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில், டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்க, கட்டணத்தில் 25 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது.

ஏ.சி. இருக்கை வசதி, எக்ஸிகியுட்டிவ் இருக்கை வசதி ஆகியவற்றுக்கு அடிப்படை கட்டணத்தில் இந்த தள்ளுபடி அளிக்கப்படும். இருப்பினும், ஜி.எஸ்.டி., முன்பதிவு கட்டணம், சூப்பர்பாஸ்ட் கட்டணம் உள்ளிட்டவை தனியாக விதிக்கப்படும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.