புதுடெல்லி, ஆக. 28: ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவரும் சிபிஐ (எம்) கட்சியைச் சேர்ந்தவருமான முன்னாள் எம்.எல்.ஏ.வுமான யூசுப் தரிகாமியை சந்திக்க அனுமதி கோரி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சீதாராம் யெச்சூரி ஜம்மு காஷ்மீர் செல்ல அனுமதி அளித்துள்ளது. எனினும், சீதாராம் யெச்சூரி தனது காஷ்மீர் பயணத்தை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது என்றும், அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதிகாரிகள் உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.