ஏஷியன்-இந்தியா வர்த்தகம் 100 பில்லியன் டாலரைத் தொடும்

சென்னை

சென்னை, ஆக.28: ஏஷியன்-இந்தியா வர்த்தகம் 2020 ஆம் ஆண்டில் 100 பில்லியன் டாலரைத் தொடும் என்று ஆந்திரா வர்த்தக சபையின் தலைவர் வி.எல்.இந்திராதத் கூறியுள்ளார். 2017 ஆம் நிதியாண்டில் 52 பில்லியன் மற்றும் 2018ஆம் நிதியாண்டில் 63 பில்லியன் அமெரிக்க டாலராகவும் இருக்கும் இந்தியா-ஆப்பி£க்கா வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான ஒரு விரிவான உத்தியை வகுப்பதில் இந்திய அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு நாடு தவிர ஏறக்குறைய அனைத்து நாடுகளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. இந்தியாவின் பார்வையிலிருந்து பார்க்கையில் சந்தைப்படுத்தல் அணுகலுக்கு இது ஒரு மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். நடப்பு வளர்ச்சி வீதம் தொடருமானால் 2025-ல் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் நடுத்தர வருமான அளவுகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கியின் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் வர்த்தகம் மற்றும் தொழில்துறைகளை ஆக்கப்பூர்வமாக மாற்றியமைக்கும் அதன் வளர்ச்சியை கண்டறிவதற்கும் மற்றும் பேணி வளர்ப்பதற்குமான முயற்சியில் ஆஃப்ரோ-ஏஷியன் வர்த்தகம் குறித்த தொழில் சந்திப்பு என்ற நிகழ்வை நடத்தவிருப்பதாக ஆந்திர வர்த்தக சபை அறிவித்துள்ளது.

ஆந்திரா வர்த்தக சபை தலைவர் வி.எல்.இந்திரா தத் கூறுகையில், வர்த்தகமும் மற்றும் முதலீடும் ஒன்றோடொன்று கைகோர்த்து செல்வதால், நாம் தொழிலை வாய்ப்புகளாக மாற்றவேண்டும் மற்றும் நாடுகளிடையே இருதரப்பு வர்த்தகத் தொழிலை ஊக்குவிப்பதில் அந்த வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த தொழில் சந்திப்பு நிகழ்வின் முனைப்பாக இருக்கிறது. அதேபோன்று ஏஷியன் நாடுகள் மற்றும் இந்தியா இடையே இருதரப்பு வர்த்தகம் 80 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்துள்ளது என்று கூறினார்.