ஜமைக்கா, ஆக.28:  விண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (30-ம் தேதி) ஜமைக்காவில் தொடங்குகிறது. இந்த ஆட்டத்திற்கான இந்திய அணியில் சில மாற்றங்களை கேப்டன் விராட் கோலி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ரிஷப் பந்துக்கு பதிலாக சகா, மயங்க் அகர்வாலுக்கு மாற்றாக ரோஹித் ஷர்மா, ஹனுமா விஹாரிக்கு பதிலாக அஸ்வின் ஆகியோரும் ஆடும் லெவனில் சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட்டில் 138 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது, குறிப்பிடத்தக்கது.