சென்னை, ஆக.29­: திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளன.

புவிசார் குறியீட்டு பொருள்கள் சட்டம் 2003-ம் ஆண்டில் அமலானது.

இந்த சட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் பட்டு, சின்னாளபட்டி சுங்குடி சேலை, பவானி ஜமுக்காளம், ஆரணி பட்டு சேலை, கோவை கோரா காட்டன் சேலை, தஞ்சாவூர் ஓவியம் மற்றும் தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, பத்தமடை பாய், தோடா இன மக்களின் பூ வேலைப்பாடு, கொடைக்கானல் மலைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம் ஆகியன இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலை ஆகியவற்றுக்கு தற்போது புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பெருமையை இவை பெறுகின்றன