குழந்தைகளுக்கு எதிரான வன்முறை: கொதிக்கும் திரிஷா

சினிமா

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற யுனிசெப் நிகழ்ச்சியில் அதன் தூதரான நடிகை திரிஷா கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திரிஷா கூறியதாவது:-

சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் இவர்களுக்கிடையிலான ஆணாதிக்க தன்மையை நிலை நிறுத்தும் செயல்பாடுகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இவ்வகையான குற்றவாளிகளை குற்றங்களில் இருந்து தப்பிக்க ஊக்குவிக்கும் செயல்களுக்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
குற்றங்கள் மற்றும் குழந்தை பாலியில் துன்புறுத்தல்கள், தெரிந்த நபரால் செய்யப்படுகின்றது.

இது போன்ற பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95% பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள். இது நமது குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழலை எடுத்துக்காட்டுகிறது. மேலும் கடந்த 2014 முதல் 2016 வரை போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திதுள்ளது வேதனை அளிக்கிறது. இனியாவது நாம் பெண் குழந்தைகளை காக்க சபதம் ஏற்க வேண்டும் என்றார்.