புதுச்சேரி, ஆக. 29: புதுச்சேரி சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் பட்ஜெட் மீதான விவாதம் கோரிக்கை காலை ஒன்பதரை மணி முதல் நடந்து கொண்டிருந்தது. அப்போது முதல் அமைச்சர் நாராயணசாமி சட்டமன்றத்தில் பேசியதாவது :- புதுவையில் கூட்டுறவு பால் சங்கங்கள் வழங்கும் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 30 ரூபாயிலிருந்து 34 அதாவது ஒரு லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் நான்கு ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் .

இந்த விலை உயர்வு ஆவின் ஒன்றுக்கு ரூபாய் இரண்டும் புதுவையிலுள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு ரூபாய் 34 கூடுதலாக வழங்கப்படும் இதனால் புதுவையில் உள்ள 100 கூட்டுறவு பால் சங்கங்கள் சேர்ந்த 40 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.
அதேபோல் பதப்படுத்தப்படும் செலவு போக்குவரத்து மற்றும் அலுவலக செலவு ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளதால் நிலையில் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு சமன்படுத்திய பால் ரூபாய் 36 லிருந்து 42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறப்பு சமன்படுத்திய பால் ரூபாய் 38 லிருந்து ரூபாய் 44 ஆக உயர்த்தப்பட்டுள்ளது நிலைப்படுத்திய பால் ரூபாய் 42 லிருந்து ரூ. 48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது உயர்த்தி விற்பனை செய்யப்படும். இந்த விலை உயர்வு அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வருவதாக சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி கூறினார்.