வாஷிங்டன், ஆக.30: அமெரிக்காவின் ஒரிகன் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒரிகன் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் ரிக்டர் அளவில் 6,30 என பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாண்டன் நகரிலிருந்து 241 கி.மீ. தொலைவிலும் பசுபிக் கடலின் 14 கி,மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது ஒரிகன் நகரப்பகுதிகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி, காலை 8 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும், இதனால் எந்த வித உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கை எதுவும் தற்போது வரை விடப்படவில்லை.