இசையமைப்பாளரான சூப்பர் சிங்கர் பாடகர்

சினிமா

7 ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் சர்பத் படத்தில் இசை அமைப்பாளராக தனது தடத்தை அழுத்தமாக பதித்துள்ளார் இசை அமைப்பாளர் அஜீஸ். கதிர், சூரி காம்பினேஷனில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்குகிறார்.

2009 சூப்பர் சிங்கர் சீசன் 2-வில் குரலால் வசீகரித்த அஜீஸ் தற்போது சினிமாவில் இசை அமைப்பாளராக உள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் குழந்தைக் குரலாக ஒலித்த இவரது குரல் அப்போதே பிரபலம். கோவா படத்தில் இவர் பாடிய இதுவரை பாடல் மிகவும் பிரபலம். விரைவில் வெளியாக இருக்கிற சர்பத் படத்தில் 5 பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்.

வெளியாகும் முன்பே சர்பத் படத்தின் பாடல்கள் மீது பெரிய நம்பிக்கை கொண்டுள்ள அஜீஸ், ‘இசை தான் என் ஜீவன்’ என்கிறார். மேலும் ஒரு வெப்சீரிஸுக்கும் இசை அமைத்து வரும் அஜீஸ் சர்பத் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்குப் பிறகு மிகப்பிரபலமான இசை அமைப்பாளாராக பரிணாமம் அடைவார் என்கிறார்கள் படக்குழுவினர்.