‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் அடுத்ததாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழும் சர்வானந்த் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்புதிய படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இவருக்கு ஜோடியாக, ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் நாயகி ரீத்து வர்மா நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சதீஷ், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் ஸ்ரீகார்த்திக் இயக்குநராக அறிமுகமாகிறார்.

‘துருவங்கள் பதினாறு’ இசைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய், அதே படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் மற்றும் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங் மூவரும் இப்படத்தில் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது. 2020 கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.