பழனி, ஆக.31­: பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் சித்தனாதன் நிறுவனத்தில் இன்று மூன்றாவது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்றது.

பஞ்சாமிர்தம் தயாரிக்கும் நிறுவனம் சித்தனாதனின் குடும்பத்தினர் வசிக்கும் வீடுகள், திருமண மண்டபம் ஆகியவற்றில் நடந்த சோதனையில் நகைகள், பணம் மற்றும் முக்கிய தஸ்தாவேஜ்கள், பென் டிரைவ்கள் சிக்கின. ரூ.25 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் அளவுக்கு பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப் பட்டாலும், ஆண்டுக்கு ரூ 50 ஆயிரம் அளவுக்கு கணக்கு காட்டபப்படுவதாக கூறப்படுகிறது.

பஞ்சாமிர்தம் வாங்குவதற்கு பில் கொடுப்பதில்லை. அதே போல பஞ்சாமிர்தம் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களை வாங்கும் பொழுதும் ரசீது இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளனர்.‘

எல்லாமே வாய்மொழி மூலமே வர்த்தகம் நடந்துள்ளதால் வரி ஏய்ப்பு கண்டு பிடிப்பது சற்று சிரமமாக இருந்ததாக வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர்.