வேலூர், ஆக.31: வேலூரை அடுத்த சத்துவாச்சாரியை சேர்ந்த தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவரை ரூ.மூன்று கோடி கேட்டு கடத்தினர்.போலீசார் அதிரடியாக செயல்பட்டு சில மணி நேரத்திலேயே மாணவனை மீட்டதுடன், அவரை கடத்திய நான்கு சக மாணவர்களையும் கைது செய்தனர்.

வேலூர்மாவட்டம்,சத்துவாச்சாரி வெள்ளாள தெருவை சேர்ந்தவர் கென்னடி இவர் வெளிநாட்டில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார் இவரது குடும்பம் சத்துவாச்சாரியில் தான் உள்ளது இவரது மகன் கோகுல்(19) லத்தேரி அருகிலுள்ள எண்டிடி எப் தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் பயின்று வருகிறார் நேற்று மாலை கல்லூரி முடிந்தவுடன் அதே கல்லூரியில் படிக்கும் சுதர்சன் மற்றும் மூன்று நண்பர்கள் சேர்ந்து காரில் கடத்தி சென்றுள்ளனர் அவனது வீட்டிற்கு தொடர்பு கொண்டு மூன்று கோடி கேட்டு செல்போனில் மிரட்டியுள்ளனர்

இதுகுறித்து அவனது குடும்பத்தினர் உடனடியாக சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் மூன்று தனிப்படைகளை அமைத்து மாணவனை மீட்க திட்டமிட்டனர் இதன் அடிப்படையில் அவர்கள் தொகையை ரூ.5 லட்சமாக குறைத்து அதனை தருமாறு தெரிவித்தனர் இதனையடுத்து தனிப்படையினர் கட்டுகட்டாக வெள்ளை பேப்பர்களை கட்டி பணம் இருப்பதை போல் ஒரு பேப்ரை உருவாக்கி அந்த பையை வள்ளிமலை அருகில் அவர்கள் சொன்ன இடத்தில் காத்திருந்த போது அந்த பையை எடுத்துகொண்டு மாணவனை விடுவித்த பின்னர் அந்த கும்பலை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் மாணவனும் உயிருடன் மீட்கப்பட்டார்
இதுகுறித்து சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மேலும் இந்த கடத்தலில் யாருக்கு தொடர்புள்ளது என விசாரணை மேற்கொண்டுள்ளனர் கல்லூரி படிக்கும் சக மாணவனை நண்பர்களே கடத்தி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.