ஏ1 படத்திற்கு பிறகு நடிகர் சந்தானம் சயின்ஸ் பிக்ஷன் பின்னணியில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதில் முதன்முதலாக சந்தானம் மூன்று வேடமேற்று நடிக்க உள்ளார். இப்படத்தை கே.ஜே ஆர் ஸ்டியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்க, எழுத்தாளர் கார்த்திக் யோகி இயக்குகிறார்.

இப்படத்தின் பெயர் என்ன என்பதை வரும் செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு அறிவிக்க உள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.