சென்னை, செப். 3: தெலுங்கானா ஆளுநராக வரும் 8-ம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழிசை வரும் 5-ம் தேதி டெல்லி செல்ல இருப்பதாகவும், அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆசி பெறுவார் என கூறப்படுகிறது.

அதன்பின் 7-ம் தேதி தமிழகம் திரும்பும் அவர் 8-ம் தேதி தெலுங்கானா சென்று அன்றைய தினமே அன்றைய தினமே பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். மூத்த மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தமிழிசை சவுந்தரராஜனுக்கு கவர்னர் பன்வாரிலால¢ புரோகித் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். புதிய பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்படுவதற்கு வாழ்த்துக்கள் என ராஜ்யபவன் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குமரி ஆனந்தன் நெற்றியில் திலகமிட்டு அவருக்கு ஆசி வழங்கினார்.