சென்னை, செப்.3: சென்ட்ரல் நிலையம் எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரெயில் செல்லும் பக்கிங்காம் கால்வாய் அருகே தண்டவாளத்தில் அழுகிய நிலைய ஆண் பிணம் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து பெரியமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு அடையாளம் தெரியாத வகையில் அழுகிய நிலையில் கிடந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சுமார் 40 வயது மதிக்க தக்க அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்று ம் யாராவது அவரை கொலை செய்யது கொண்டு வந்து வீசினார்களா என்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.