பெங்களூரு, செப்.4: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறி வருமான வரித்துறை அதிகாரிகள் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் கடந்தாண்டு சோதனை நடத்தினர். டெல்லியில் உள்ள அவரது வீட்டிலும் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 8.59 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் வழக்குப் பதிவு செய்து டி.கே.சிவகுமாரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து டி.கே.சிவகுமார் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று தள்ளுபடி ஆனது. இதனைத் தொடர்ந்து அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

அவர் நேரில் ஆஜாராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில், பண மோசடி வழக்கில் டி.கே.சிவகுமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.