லண்டன், செப்.4: லண்டனில் இந்திய தூதரகத்தின் வெளியே பாகிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று போராட்டம் நடத்தியதுடன் அலுவலக கண்ணாடிகளை உடைத்து சேதம் ஏற்படுத்தினர்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே பாகிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் தூதரக வளாகத்தில் சேதம் ஏற்பட்டது.

இந்திய அரசுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். தூதரக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் தொடர்பான தகவல் மற்றும் வீடியோ பதிவை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

இந்த போராட்டம் தொடர்பாக 2 பேரை கைது செய்து உள்ளதாக லண்டன் போலீசார் தெரிவித்து உள்ளனர்.