விலாடிவோஸ்டோ, செப்.4: ரஷ்யாவுக்கு 2 நாள்கள் சுற்றுப்பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்நாட்டுஅதிபர் புதின் அவரை வரவேற்று அங்குள்ள கப்பல் கட்டும் தளத்தை சுற்றிக்காண்பித்தார்.

ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, 2 நட்கள் பயணமாக ரஷ்யா சென்றார். ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புதினை மோடி சந்தித்தார். விலாடிவோஸ்டோக்கில் உள்ள கப்பல் கட்டும் தளத்துக்கு புதினுடன் சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். கப்பல் கட்டும் தொழிலில் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பத்தை பிரதமர் மோடி கேட்டறிந்தார். நாளை காலையில் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பின்னர் நாளையே அவர் இந்தியாவுக்கு புறப்படுகிறார்.