விலாடிவோஸ்டோக், செப்.5: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் மங்கோலியா நாட்டு அதிபர் ஆகியோரை பிரதமர் மோடி இன்று சந்தித்தார்.

ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று, இரண்டு நாள் பயணமாக மோடி நேற்று ரஷ்யாவுக்கு சென்றார். அவருக்கு விலாடிவோஸ்டோக் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின் மோடியை சந்தித்தார். அவருடன் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டதுடன் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.

தனது பயணத்தின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடி, மங்கோலியா அதிபர் கால்ட்மாகின் பட்டுல்காவை சந்தித்தார். முன்னதாக, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவையும் அவர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பொருளாதாரம் , பாதுகாப்புத்துறைகளில் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.