அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி வி பிரகாஷ் குமார் நடித்துள்ள படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. இந்த படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் இசையமைக்க, சித்து குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஷான் லோகோஷ் எடிட்டிங் செய்ய மூர்த்தி கலையமைத்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வாரம் ஆரியாவின் மகா முனி, யோகிபாபுவின் ஜாம்பி, தனுசின் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் தனுஷ் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சிவப்பு மஞ்சள் பச்சை படம் 12-ம் தேதியில் இருந்து 6-ம் தேதிக்கு வெளியாக உள்ளது.