சென்னை, செப்.5: சென்னையில் தங்கி அண்ணாநகரில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி அகாடமியில் படித்துவந்த ஆந்திர வாலிபர், 2-வது மாடியிலிருந்து இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியை சேர்ந்தவர் ரவி பனிந்திரன் (வயது 22). இவர், சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் தங்கி அங்குள்ள தனியார் ஐஏஎஸ் அகாடமியில் படித்து வந்தார்.

இவரது வீட்டின் அருகில் வீடு ஒன்றின் கட்டுமான பணி நடந்துவருகிறது. கடந்த 30-ம் தேதி காலை 9 மணியளவில் இந்த கட்டிடத்தின் 2-வது மாடியில் நின்றபடி ரவி செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார். சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ரவி உயிரிழந்துவிட்டுள்ளார். இது குறித்து, திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.