செங்குன்றம், செப்.5: பாடியநல்லூர் மருது பாண்டி நகரில் உள்ள அன்னை தெரசா பள்ளி வளாகததில் அன்னை தெரசாவிற்கு கோவில் கட்டி முழு உருவ சிலை திறப்பு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் பேராசிரியர் சிவ.செல்வகுமார் ஏற்பாட்டில் நடந்த விழாவிற்கு முன்னாள் எம்.பி.குமரி அனந்தன் தலைமை தாங்கினார். செந்தமிழறிஞர் க.சிவசண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ அருள்அன்பரசு சமூக போராளி டிராபிக். ராமசாமி முன்னிலை வகித்தனர்.

பள்ளி சேர்மன் சி.பி.அருளாளன் வரவேற்றார். அன்னை தெரசா கோயிலை திறந்து வைத்து முழு உருவசிலைக்கு மலர் மாலை அணிவித்த உயர்நீதிமன்ற நீதியரசன் கே.என். பாஷா கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. கும்மிடிபூண்டி வட்டார கல்வி அலுவலர் பூவராக மூர்த்தி, சீனிவாசன், தாமோதரன், விஜயகுமார், முகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.