சிதம்பரம், செப்.5: வீராணம் ஏரியின் கொள்ளளவு 46.75 அடியை எட்டியுள்ள நிலையில் கல்லணையிலிருந்து வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை குடிநீருக்கு தினமும் 50 கன அடி திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப் என்று பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் பகுதியில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசனத்துக்கும் சென்னைக்கு குடிநீருக்கும் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு கல்லணையிலிருந்து கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேலும் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருவதால் கர இருந்து தண்ணீரை வீராணம் ஏரிக்கு அனுப்ப வேண்டாம் என கடலூர் மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதின் பேரில், வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.
மேலும் வீராணம் ஏரி மொத்த கொள்ளளவு 47.5 அடியாகும். தற்போது ஏரியில் 46.75 அடி நீர் இருப்பு உள்ளது.

இதில் தினமும் சென்னை குடிநீருக்கு 50 கன அடி நீர் அனுப்ப பட்டு வருகிறது. மேலும் விவசாய பாசனத்திற்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் கூட்டத்தைக் கூட்டி அதன்பின்பு தண்ணீர் திறந்துவிட முடிவு செய்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி ஒரு வாரத்திற்குள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிகிறது.