சிதம்பரம், செப்.5: சிதம்பரத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டிவருமாறு:- தமிழகத்திற்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கூடுதலாக 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. பருப்பு, பாமாயில் மானியம் நிறுத்தப் பட்டிருக்கிறது. அதனால் அதை மீண்டும் மத்திய அரசு வழங்க வேண்டும்.

இந்தியா பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதனால் வரும் காலத்தில் இது சீரமைக்கப்படும். ப. சிதம்பரம் மீது நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை துவங்கியுள்ளது. சட்டம் அனைவருக்கும் சமம். நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து தான் இதை முடிவு செய்ய முடியும். தமாகாவை பொறுத்தவரை புதிய கூட்டணியை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.