வாஷிங்டன், செப்.6: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிராக வாக்களிக்க 52% அமெரிக்கர்கள் முடிவெடுத்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ வால்ஷ் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன.

இந்த நிலையில், அந்நாட்டு தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை வெளியிடும் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்வியுடன் ஆன்லைன் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் 52% பேர் டிரம்ப்பிற்கு எதிராக வாக்களிக்க போவதாக தெரிவித்துள்ளனர். 42% பேர் மீண்டும் டிரம்பிற்கே வாக்களிக்க இருப்பதாக கூறியுள்ளனர். மீதமுள்ள 6% வாக்காளர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என கூறியுள்ளனர்.