பையில் மறைத்து குழந்தையை கடத்த முயன்ற பெண்

உலகம்

மணிலா, செப்.6: கைப்பையில் 6 மாத குழந்தை ஒன்றை மறைத்து கடத்த முயன்ற பெண் ஒருவர் மணிலாவில் குடியேற்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஜெனிபர் டல்பார்ட் (வயது 43) என்ற பெண் அமெரிக்காவைச் சேர்ந்தவர். பிலிப்பைன்சில் சிறிது காலம் வசித்து வந்தார். அவர் அமெரிக்கா செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்தார்.

குடியேற்ற அதிகாரிகள் சோதனை, பாதுகாப்பு சோதனை முடிந்து அவர் விமானத்தில் ஏற இருந்த போது அவரது கைப்பையில் குழந்தை இருப்பதை விமான பணிப்பெண் கண்டுபிடித்தார். உடனடியாக குடியேற்ற அதிகாரிகள் விரைந்து வந்து அவரை கைது செய்தனர்.