சிங்கப்பூர், செப்.6: ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் இன்று சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே தனது 95 வயதில் இறந்துவிட்டார் என்று அந்நாட்டின் தற்போதைய அதிபர் எம்மர்சன் மனாங்காக்வா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முகாபே சிங்கப்பூரில் சமீபத்தில் அடிக்கடி மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

முகாபே ஒரு ஆப்பிரிக்க விடுதலை வீரராகவும், இன நல்லிணக்கத்தின் தலைவராகவும் விளங்கினார். ஏறக்குறைய 40 வருடங்களாக ஜிம்பாப்வே அதிபராக இருந்தார். 2017-ல் தனது சொந்த ஆயுதப்படைகளால் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.