ரவீந்திரநாத் கூறியது தனிப்பட்ட கருத்து

சென்னை

சென்னை, செப். 6: இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் ரவீந்திரநாத் எம்பி பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அதிமுகவுக்கு என தனி கொள்கை உள்ளது என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல், அதனால்தான் முதல்வரின் வெளிநாடு பயணத்தை விமர்சிக்கிறார். முதலீடுகளை ஈர்த்து வந்தால் விழா எடுப்பேன் என்று கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின். விரைவில் அவர் விழா எடுப்பார், எங்களை அழைப்பார்.

அவர் சொன்னதிலிருந்து பின்வாங்கக் கூடாது என்றார். மேலும் அவர் கூறுகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திகார் ஜெயிலுக்கு சென்று தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார் என்றார். இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் ரவீந்திரநாத் எம்பி பேசுகையில், முதலில் நான் இந்து, அதன் பிறகு தான் மற்றவை என கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு,அது அவரது தனிப்பட்ட கருத்து என்றார். திமுகவும், காங்கிரசும். அதிமுகவை பொறுத்தவரை ஜாதி, மதம் பாகுபாடு பார்க்காத கட்சி. ரவீந்திரநாத் சொன்னது பற்றி மேலும் கேட்ட போது இதுவும் அவரது தனிப்பட்ட கருத்து. அதிமுகவுக்கென தனிப்பட்ட கொள்கை உள்ளது என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.