நியூயார்க், செப்.6:  அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவின்கீழ் இன்று நடந்த அரையிறுதி போட்டியில் அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், உக்ரைனின் ஸ்விட்டோலினாவை எதிர்கொண்டு 6-3, 6-1 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார்.

இதன்மூலம், அமெரிக்க ஓபனில் 10-வது முறையாக அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
நாளை மறுநாள் (8-ம் தேதி) நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனை ஆந்திரீஸ்கூவை, செரீனா எதிர்கொள்கிறார். அமெரிக்க ஓபனில் இதுவரை 6 முறை பட்டம் வென்றுள்ள செரீனா, மொத்தமாக 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தன்வசமாக்கியுள்ளார்.
நடப்பு அமெரிக்க தொடரிலும் செரீனா சாம்பியனாகும் பட்சத்தில், முன்னாள் ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரேட்டின் (24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்) சாதனையை அவர் சமன் செய்யக்கூடும்.