புதுடெல்லி, செப். 6: போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர், தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை நடுரோட்டில் தீவைத்து கொளுத்தினார். புதிய மோட்டார் வாகன சட்டம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் டெல்லியில் அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அபராதம் வசூலிக்கப்படும் நிலையில், அதேபோல், நேற்று ஒருவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

இதையடுத்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர், தனது இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தினார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.