சென்னை, செப்.6: ஓட்டேரி சத்தியவாணி மூர்த்தி நகர் சந்தியப்பன் தெருவை சேர்ந்தவர் சத்யா (வயது 22). இவர் நேற்றுமுன்தினம் தனது வீட்டிற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 பேர் கொண்ட மர்மகும்பல், சத்யாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில், படுகாயமடைந்த சத்யாவிற்கு கே.எம்.சி.யில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். துணை கமிஷனர் மனோகரன், உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் இன்று அதிகாலை மாதவரத்தில் வீட்டில் பதுங்கியிருந்த கன்னிகாபுரத்தை சேர்ந்த ரீகன், ஓசை மணி,மாதவரத்தை சேர்ந்த ஹரீஷைகைது செய்தனர்.