சீனாவில் ஒரே நாளில் ரூ.10 கோடி வசூலை குவித்த 2.0

சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வெற்றி பெற்ற படம் 2.0. இந்த படத்தை சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் பிரமாண்டமான தயாரித்து இருந்தது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைத்து இருந்தார். இந்தியா முழுவதும் கடந்த நவம்பர் மாதம் வெளியான இப்படம் சுமார் ரூ.600 கோடி அளவிற்கு வசூலை குவித்தது. இதனை தொடர்ந்து சீன மொழியில் படத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கின.

அனைத்து வேலைகளும் நிறைவடைந்து சீனா முழுவதும் நேற்று வெளியானது. அந்நாட்டில் உள்ள 48 ஆயிரம் 3டி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. வெளியான முதல் நாளே ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வசூலை குவித்தது. பிரிவியூவ் காட்சிகளில் 35 லட்சமும், முதல் நாளில் 8.61 கோடியும், 2-ம் நாளில் முன்பதிவான வரை ரூ 1.75 கோடியும் வசூலானது. இதன் மூலம் ரஜினியின் 2.0 படம் முதல் நாளில் ரூ.10.71 கோடி வசூலை குவித்துள்ளது.