சென்னை, செப். 9: ராயபுரத்தில் இயங்கிவரும் புரொஃபசர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆய்வு மையம் மற்றும் நீரிழிவிற்கான எம்வி மருத்துவமனை, கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்காக நீரிழிவு நிலையில் சிறுநீரகம் மற்றும் பாதங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மீது இந்தியாவின் முதல் ஆவணத்தை இன்று வெளியிட்டது.

தமிழ்நாடு நீரிழிவுசார் உடலுறுப்பு நீக்க கணக்கெடுப்பு ஆய்வு திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய ராயபுரத்திலுள்ள நீரிழிவுக்கான எம்.வி. மருத்துவமனை மற்றும் புரொஃபசர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆய்வு மையத்தின் தலைவர் மற்றும் தலைமை நீரிழிவு சிகிச்சை நிபுணர், டாக்டர். விஜய் விஸ்வநாதன், ‘உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு ஒத்துழைப்பு மையமாக இந்த கணக்கெடுப்பு ஆய்வானது இம்மருத்துவமனையால் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நீரிழிவு நிலையின் காரணமாக, உடலுறுப்பு நீக்கத்தின் விகிதாச்சாரம் மீதான ஆய்வாக இது இருக்கும். பல்வேறு நோய் நிலைகளுக்காக அறுவைசிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் இந்த கணக்கெடுப்பு ஆய்வு நடத்தப்படும்.

தமிழ்நாட்டில், நீரிழிவு பாதிப்பின் காரணமாக உடலுறுப்பு நீக்கம் செய்யப்படுகின்ற பிரச்சனையின் அளவையும், வீச்செல்லையையும் புரிந்துகொள்வதற்கு இந்த நோயியல் சார்ந்த கணக்கெடுப்பு உதவும். இதன்மூலம் இந்தப் பிரச்சனைக்கு கொள்கை வகுப்பாளர்கள் முறையான முன்னுரிமையை வழங்கமுடியும்,’ என்று கூறினார்.