ராம்ஜெத்மலானி மறைவு: ஜனாதிபதி, மோடி இரங்கல்

இந்தியா

புதுடெல்லி, செப். 9: முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத் மலானி டெல்லியில் நேற்று காலமானார். அவரது வயது 95. உடல்நலக் குறைவால் இருந்து வந்த ராம்ஜெத்மலானி டெல்லியில் உள்ள தனது வீட்டில் அவர் நேற்று காலை காலமானார்.

பாகிஸ்தானின் சிந்து பகுதியில் பிறந்த இவர் சொந்த ஊரில் வழக்கறிஞராக வேலைசெய்து வந்தார். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு மும்பைக்கு வந்து வழக்கறிஞராக பணியாற்றினார். வாஜ்பாய் அமைச்சரவையில் சட்டம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தி சாதுர்யம் மிக்க புகழ்பெற்ற ஒரு வழக்கறிஞரை நாடு இழந்துவிட்டது என்றார்.