சென்னை, செப்.9: சென்னை பூக்கடை பகுதியில் உள்ள லாட்ஜில் போலீசார் அவ்வப்போது சோதனையிடுவது வழக்கம். இதேபோல், பூக்கடை தனிப்படை போலீசார் நேற்று நடத்திய சோதனையில், அங்கு தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த 2 பேரிடம் உரிய ஆவணங்களின்றி தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. 3 கிலோ எடையுயடைய அந்த தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக, கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பிஜூ உட்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.