ஜெய்ப்பூர், செப்.9: ஹரியானாவில் முக்கிய குற்றவாளியான ஒருவன் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் இன்று காலை ராஜஸ்தானில் உள்ள காவல் நிலையத்தின் சிறையில் தப்பித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து 166 கி.மீ தூரத்தில் உள்ள ஆல்வார் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்குள் இன்று காலை திடீரென புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, ஸ்டேஷன் கட்டிடத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதைத்தொடர்ந்து, அந்த கும்பல் பூட்டப்பட்டிருந்த காவல் நிலைய சிறையில் இருந்து விக்ரம் குஜ்ஜாரை மீட்டுச்சென்றது.