பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்து உலக புகழ் பெற்றவர் ரம்யாகிருஷ்ணன். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 11 எபிசோடுகளாக உருவாக்கவுள்ள இந்த வெப் சீரிஸ்க்கு ‘குயின்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இயக்குனர் ஏ.எல்.விஜய் ‘தலைவி’ என்ற படத்தை எடுக்க உள்ளதாக அவரின் பிறந்த நாளான கடந்த பிப்ரவரி 24-ம் தேதி அறிவித்தார். தமிழ், தெலுங்கு,ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ஜெயலலிதா கதா பாத்திரத்திற்கு பொருத்தமான நடிகையை தேர்வு செய்து வருகிறார்.

இதேபோல் இயக்குனர் பிரியதர்ஷினி என்பவர் அயன்லேடி என்ற பெயரில் ஜெயலலிதாவின் பயோ பிக் படத்தை உருவாக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவாக நிதியா மேனன் நடிக்கிறார். இந்த நிலையில் வெப் சீரிசாக ஜெயலலிதா வாழ்க்கை வராலாற்று படத்தை கௌதம் மேனன் இயக்க உள்ளார். இதில் ஜெயலலிதாவாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகியுள்ளார். 11 எபிசோடுகளாக உருவாக்கவுள்ள இந்த வெப் சீரிஸ்க்கு ‘குயின்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சீரிஸில் நடிப்பதற்காக ஜெயலலிதா குறித்த தகவல்களை சேகரித்து கற்று வருகிறாரார் ரம்யாகிருஷ்ணன். இது ஒடிடி பிளாட்பாமில் எம்எக்ஸ் பிளேயருடன் இணைந்து கவுதம் மேனன் உருவாக்குகிறார். இதில் இணை இயக்குனராக பிரசாந் முருகேசன் பணியாற்ற உள்ளார். ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ள குறிப்பிடத்தக்கது.