சென்னை, செப்.10: முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்களிடம் கூறுகையில் அடுத்ததாக தான் இஸ்ரேலுக்கு பயணம் செல்ல இருப்பதாக தெரிவித்தார்
14 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து இன்று சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது உங்கள் வெளிநாட்டு பயணம் பிற நாடுகளுக்கும் தொடருமா என்று கேட்டனர். அதற்கு முதல்வர் பதிலளித்து கூறியதாவது:-

நிச்சயமாக தொடரும். அடுத்தது இஸ்ரேல் செல்லவிருக்கிறோம். ஏனென்றால், தமிழகத்தில் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீரை இஸ்ரேலில்
7 ஏக்கருக்கு பயன்படுத்தும் நவீன வசதியை புகுத்தியிருக்கிறார்கள். அந்தளவிற்கு தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் நாடு இஸ்ரேல். அதுமட்டுமல்லாமல், கழிவுநீரை மறுசுழற்சி செய்து விவசாயத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். நம் மாநிலத்தில் பருவமழை பொய்த்து விவசாயிகள் பாதிக்கப்படுவதால், நீரை சிக்கனமாக பயன்படுத்துதலை அறிந்து வருவதற்கு இஸ்ரேல் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருக்கின்றோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.